இலங்கையில் கடந்த காலங்களில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்றும் அவர்களின் நடவடிக்கைகள் மீது அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கெப்ரில்லா நோல் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது களையப்பட்டு நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். 2003ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இணங்கிக்கொண்டபடி இலங்கையின் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை முரண்பாட்டை கொண்டிருக்கிறது.
எனவே பிரதம நீதியரசர் ஒருவர் மீது விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயாதீனமான குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் கடைப்பிடித்து, நீதித்துறை யாரினதும் தலையீடின்றி செயற்படுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கெப்ரில்லா நோல் கோரிக்கை விடுத்துள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.