'நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களிலும் அந்த தீர்ப்புக்கள் பலமற்றவையாகக் காணப்படும் பட்சத்திலும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இழக்கப்படும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'இன்று பாரியதொரு பிரச்சினை தோன்றியுள்ளது. நிறைவேற்று, அரசியலமைப்பு மற்றும் சட்டவாக்கத் துறைகளில் ஏற்பட்டுள்ள மோதல்களை மக்கள் அவதானித்து வருகின்றனர். இந்நிலையில், நீதித்துறையின் மீதான மக்களின் அவதானம் குறைவடைந்துள்ளது. இந்த நிலைமையை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இப்பிரச்சினை குறித்த அவதானத்தைச் செலுத்தி நாம் செயற்பட வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் தியாக மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும். நாம் குற்றவாளிகள், நிரபராதிகள் என சத்திமிட்டுக் கூறுவதால் எந்தவொரு பயனும் இல்லை. அனைவருடனும் சகோதர மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும். நிறுவனங்களும், அவற்றில் பணிபுரிபவர்களும்கூட அவ்வாறு செயற்பட வேண்டும்.
நாட்டின் பிரதானமான மூன்று நிறுவனங்களும் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும். அவற்றுக்கிடையே அந்நியோன்யம் தலைதூக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை மிதித்துக்கொண்டு மற்றொரு நிறுவனத்தை தூக்கி நிறுத்த முடியாது.
மக்கள் ஆணை எங்கு உள்ளதோ அவ்விடத்துக்கு மதிப்பளிக்க நாம் தெரிந்திருக்க வேண்டும்' என்று சிரேஷ்ட அமைச்சர் ரட்னசிறி விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.