......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

காணாமல் போன, கடத்தப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தரக் கோரி ஆர்ப்பாட்டம்

(எஸ்.ஜெனி)

காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்ட உறவுகளையும் கண்டுபிடித்துத் தருமாறு கோரி மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது. 


காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சமாசம், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அனுசரணையுடன் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காணமல் போனவர்களினதும் கடத்தப்பட்டவர்களினதும் உறவினர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பியதுடன், பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர். 

மன்னார் செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் விசேட கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மன்னார் செபஸ்தியார் பேராலயத்திற்கு முன்பாக  ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, மன்னார் பொலிஸ் நிலைய வீதி ஊடாக மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்து பின் மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

இதன் பின்னர் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேலிடம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். 

கடந்த பல வருடங்களாக கைதுசெய்யப்பட்டும் இனந்தெரியாதோர் என்ற போர்வையில் கடத்தப்பட்டுள்ள தங்களது உறவுகளின் இருப்பிடம் இதுவரை அறிய முடியாமல்  உள்ளதுடன், அவர்கள் உயிருடன் உள்ளனரா, இல்லையா? என்பது கூட இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

சட்டத்திற்கு புறம்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களை மறைத்து வைத்திருக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதுடன், அவர்களை மீள ஒப்படைப்பதோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்துவதோ கைதுசெய்த அதிகாரத் தரப்பின் கட்டாய கடமையாயும், ஜனநாயக ரீதியிலான கட்டாயக் கடமையும் ஆகும். எனினும் இதுவரையில் இவர்கள் மீள விடுவிக்கப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை.

இவர்களை விடுவித்து உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களில் குற்றம் இருந்தால் சட்டத்தின்படி நிறுத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை, உபதலைவர் அந்தோனி சகாயம், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ் சோசை, தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அமைப்பாளர் கோம குமார, பௌத்த குருமார்கள், அருட்தந்தையர்கள், மன்னார் நகரசபை தலைவர், உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE