......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்ற கலாசாரத்தை அவமதித்துவிட்டனர்

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை விவகாரம்:
கல்வியியலாளர்கள் குற்றச்சாட்டு

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்து, பாராளுமன்ற கலாசாரத்தை அவமதித்திருப்பதாக பல்கலைக்கழக கல்வியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெரிவுக்குழுவில் பங்குபற்றியிருந்த எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் அதிலிருந்து திடீரென வெளியேறியமையானது சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாகவும் பல்கலைக்கழக கல்வியியலாளர்கள் நேற்றுக் கூறினர்.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை அரசியலமைப் புக்கு உட்பட்டதுடன், இக்குற்றப் பிரேர ணையை விசாரிப்பதற்கு சபாநாயகராலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப் பட்டது என திறந்த பல்கலைக்கழகத்தின் கணித மற்றும் பொறியியல் திணைக்களத் தின் விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக தெரிவித்தார்.
தெரிவுக்குழு விடயத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதமானது முறைப்படியான பாராளுமன்ற செயற்பாடுகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளு மன்றத்தின் சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பி னர்களின் இந்த நடவடிக்கையான எதிர் மறையான செயற்பாடாகவே அமைந்துள்ளது. சபாநாயகர் தெரிவுக்குழுவொன்றை அமைத் தால் அது அனைவராலும் ஏற்றுக்கொள் ளக்கூடியதொன்றாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற் பாடுகளை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் வழங்கிய உத்தரவை எதிர்க்கட்சி பாராளு மன்ற உறுப்பினர் முதலில் மதிப்பளித்திருக்க வேண்டும்.
தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் பூர்த்தியடைய முன்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறியுள் ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விசாரணையை பயன்படுத்தி நாட்டை நிலைகுலையச் செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது எனவும், திறந்த பல்கலைக்கழகத்தின் கணித மற்றும் பொறியியல் திணைக்களத்தின் விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக மேலும் தெரிவித்தார்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE