......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

இலங்கை நிலைமை குறித்து சுயாதீன மதிப்பீடு செய்யப்பட வேண்டும் - மெல்கம் பெரேசர்


இலங்கை நிலைமைகள் குறித்து சுயாதீன மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் பெரேசர் தெரிவித்துள்ளார்.
 
படகு மூலம் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டதன் பின்னர் துன்புறுத்தப்படுகின்றார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விசாரணைகளின் மூலம் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது நிரூபிக்கப்பட்டால், படகுப் பயணிகளை நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறான ஓர் சூழ்நிலையில் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் பெரேசர் தெரிவித்துள்ளார்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE