கல்முனை கல்வி வலய முறைசாரா கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் இடம்பெற்றன.
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீரின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் காரைதீவு கோட்ட கல்வி பணிப்பாளர் பரதன் கந்தசாமி, முறைசாரா கல்விக்கான இணைப்பாளர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்வானது பெற்றோர்களுக்கும் இடைவிலகிய மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.