......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

அமெரிக்காவின் மற்றொரு ஆளில்லா விமானத்தை கைப்பற்றியது ஈரான்


தமது வான்பரப்புக்குள் ஊடுருவிய அமெரிக்காவின் சிறிய ரக ஆளில்லா விமானத்தை கைப்பற்றியதாக ஈரான் புரட்சிப் படை நேற்று அறிவித்தது.

பெர்சிய வளைகுடா கடற்பகுதியில் ரோந்து சென்ற அமெரிக்க ஆளில்லா விமானம் ஈரான் வான்பரப்புக்குள் ஊடுருவியதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்டதாக ஈரானின் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா விமானம் வேவுபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அது கைப்பற்றப்பட்டதாக ஈரான் கடற்படை கூறியுள்ளது.
எனினும் எங்கே, எப்போது, எவ்வாறு இந்த ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து ஈரான் புரட்சிப்படை விளக்கவில்லை.
ஸ்கான் ஈகல் என்ற அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தையே ஈரான் தரையிறங்கியுள்ளது. உளவு பார்க்க பயன்படுத்தப்படும் இந்த விமானம் மூன்று மீற்றர் சிறகுகள் கொண்டதாகும். இது பெரும்பாலும் கப்பல்களில் இருந்து இயக்கப்படுவதோடு 100 கிலோ மீற்றர் வரை பறக்கக் கூடியது. ஈரான் ஓர் ஆண்டுக்கு முன்னர் இதனை விடவும் பெரிதான அமெரிக்காவின் செய்மதி ஆளில்லா விமானம் ஒன்றை கைப்பற்றியது. அதனை திருப்பித் தருமாறு அமெரிக்கா கேட்ட போதும் அந்த கோரிக்கையை மறுத்த ஈரான் அந்த ஆளில்லா விமானத்தின் உதவியுடன் தமக்கான ஆளில்லா விமானம் ஒன்றை தயாரித்தது.
அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக ஈரான் மீது குற்றம் சாட்டும் அமெரிக்கா அது தொடர்பில் அவதானமாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஒக்டோபரில் அமெரிக்கா தமது வான் பரப்புக்குள் சட்டவிரோதமாக 8 தடவைகள் நுழைந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சு கடந்த வாரம் குற்றம் சாட்டியது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE