......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

யூத குடியிருப்புகளை அமைக்கும் திட்டத்தை கைவிட இஸ்ரேல் மறுப்பு


பலஸ்தீன எல்லைகளான கிழக்கு ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரையில் 3000 வீடுகளை கட்டும் தனது திட்டத்தை கைவிடப்போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தனது உரிமைக்கான நிலைப்பாட்டில் தொடர்ந்து செயற்படும் என்றும் தமது முடிவுகளை மாற்றப் போவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் 3000 யூத குடியேற்ற திட்டத்திற்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பைன், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாடுகள் அந்தந்த நாடுகளின் இஸ்ரேல் தூதரகங்களுக்கு விளக்கம் கேட்டு அழைப்பாணை விடுத்துள்ளன. இஸ்ரேலின் முடிவை மீள் பரிசீலனை செய்யும்படி அமெரிக்காவும் கோரியுள்ளது. தவிர, ஐ.நா. சபை உட்பட ரஷ்யா, ஜெர்மனியும் இஸ்ரேலின் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்திற்கு ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத அங்கத்துவ அந்தஸ்து கிடைக்கப் பெற்று அடுத்த தினத்திலேயே பலஸ்தீன எல்லைக்குள் 3000 வீடுகளை கட்ட இஸ்ரேல் அரசு அனுமதி அளித்தது. இஸ்ரேலின் புதிய யூதக் குடியேற்றங்கள் தமது எதிர்கால பலஸ்தீன தேசத்துக்கு தடங்கலாக அமையும் என பலஸ்தீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் தனது உரிமைக்கான நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கும். சர்வதேச அளவில் அழுத்தத்திற்கு முகம் கொடுத்தாலும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் ஏற்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் புதிதாக ஜெரூசலத்திற்கும் மேற்குக் கரைக்கும் இடைப்பட்ட மலா அதுமிம் பகுதியி லேயே புதிய குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. பலஸ்தீன் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மேற்குக் கரைக்கும் ஜெரூசலத்திற்குமான தொடர்பு முற்றாக துண்டிக்கப்படுவதாக கூறப்பட்டு ள்ளது. ஏற்கனவே 1967ம் ஆண்டு ஆக்கிர மிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பகுதிகளில் இஸ்ரேலின் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500,000 க்கும் மேற்பட்ட யூதர்கள் வசித்து வருகின்றனர்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE