இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியும் கல்விமானுமான டாக்டர் அப்துல் கலாம் தன்னுடைய அறிவுக் கண்களை திறந்துவிட்டதனால்தான் இன்று மிகக் குறுகிய காலத்தில் தன்னால் ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வித் தரத்தை அனைவரும் விந்தையடையக்கூடிய வகையில் உயர்த்த முடிந்தது என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தினகரனுக்கு அளித்த விசேட பேட்டியில் குறிப்பிட்டார்.
டொக்டர் அப்துல் கலாமுக்கு மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பொன்னாடை
போர்த்தி கெளரவிக்கிறார். |
நான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் எண்ணக்கருவை நிறைவேற்றும் ஒரு தொண்டனாகவே இருக்கின்றேன். இந்தப் பணிகளை எனது தலைவர் திரு.ஆறுமுகன் தொண்டமான் மற்றும் திரு. முத்துசிவலிங்கம் அவர்களின் வழிகாட்டலுடனான அனுசரணையுடன் வெற்றிகரமாக செய்துவருகின்றேன் என்று கூறினார்.
ஊவா மாகாணத்தில் எல்லாமாக 150 தமிழ் பாடசாலைகள் இருக்கின்றன. இம்மாகாணத்தின் முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ கல்வி அமைச்சராக இருக்கின்றபோதிலும் தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் தனது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து இவ்வாண்டில் மாத்திரம் 100 மில்லியன் ரூபாவை அதற்கென ஒதுக்கிக்கொடுத்துள்ளார் என்று செந்தில் தொண்டமான் மேலும் முதலமைச்சருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
மாகாண அமைச்சர் செந்தில் தொண்ட மான் மேலும் கூறியதாவது,
டாக்டர் அப்துல் கலாம் கல்வி கற்ற திருச்சி சென்.ஜோசப் கல்லூரியிலும், பின்னர் அவர் கல்வி கற்ற பாரதிதாசன் பல் கலைக்கழகத்திலும் கல்வி கற்ற காரணத் தினால் எனக்கு இந்தப் பெரியவர் அப்துல் கலாம் மீது நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. நானும், இதே கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றேன் என்பதைத் தெரிந்துகொண்ட டாக்டர் அப்துல் கலாம், “தம்பி நீங்கள் என்ன தொழில் புரிகிaர்கள்” என்று கேட்டார்.
அதற்கு நான் “எனது முப்பாட் டனார் செளமியமூர்த்தி தொண்டமான், மாமனார் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய நல்வழியில் எமது மக்களுக்கு சேவை செய்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் ஒரு தொண்டனாக இருந்து வருகிறேன்” என்று கூறினேன்.
மலையக மக்களின் அறிவுக் கண்ணைத் திறவுங்கள் அப்துல் கலாம்
நான் ஊவா மாகாண சபையில் அமைச்சர் பதவி வகிக்கிறேன் என்பதை தெரிந்துகொண்ட டாக்டர் அப்துல் கலாம், நீங்கள் உங்களுடைய மலையக மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாயின் அவர்களின் அறிவுக்கண்ணை முதலில் திறந்துவிடுங்கள். அவ்விதம் செய்தால் உங்கள் சமூகம் எதிர்காலத்தில் வளமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்று அந்தப் பெரியவர் எனக்குத் தெரிவித்த அறிவுரை எனது இதயத்தில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது.
அதனால் அவரது அறி வுரையை எனது தலைவர் திரு.ஆறுமுகன் தொண்டமான், திரு.முத்துசிவலிங்கம் ஆகியோரின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் ஏற்றுக்கொண்டு நான் ஊவா மாகாணத்தில் கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றேன்.
ஊவா மாகாணத்தில் உள்ள 150 தமிழ் பாடசாலைகளில் 60 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு பாடசாலைக்கும் 5 முதல் 10 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளேன். சுமார் ஆறு மாதம் என்ற குறுகிய காலத்தில் 30 பாடசாலை களுக்கு நிரந்தர கட்டடங்களையும் அமைத்துக் கொடுத்திருக்கின்றேன்.
2011ஆம் ஆண்டில் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 60 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தேன். இவ்வாண்டில் இந்தத்தொகை 100 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. பாடசாலை அதிபர் களுக்கு காரியாலயங்கள், மழை காலத்தில் ஒழுகும் வகுப்பறைக் கூரைகளை மாற்றி புதிய கூரைகளை அமைத்துள்ளேன். பாடசாலை கட்டடத்துக்குள் கட்டாக்காலி மாடுகள் நுழைவதைத் தடுப்பதற்காக பாடசாலைகளைச் சுற்றி வேலி அமைத் துள்ளேன்.
இதைவிட மிகவும் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்த நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 38 ஆசிரியர்கள் பதுளையில் வசிப்பிடமின்றி கஷ்டங்களை அனுபவித்து வந்தார்கள். இவர்களின் ஐந்தாண்டு சேவைக்காலம் முடிவடைந்த பின்னரும் அவர்களுக்கு தங்களது சொந்த கிராமங்களுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் அவர்களுக்கு உதவிசெய்யும் முகமாக நான், ஊவா மாகாண முதலமைச் சரின் உதவியுடன் 44 பட்டதாரி ஆசி ரியர்களை ஊவா மாகாணத்தில் நியமித்து இந்த 38 ஆசிரியர்களும் நுவரெலியாவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு வகைசெய்தேன் என்றார்.
இளைஞரான அமைச்சர் செந்தில் தொண்டமானை இன்று ஊவா மாகாண மக்கள் தேசிய ஒருமைப்பாட்டின் சின்ன மாக விளங்குகிறார் என்று பாராட்டுகிறார்கள். அந்தளவுக்கு அவரது நற்பணிகளை மக் கள் வரவேற்கிறார்கள்.
இளைஞரான செந்தில் தொண்டமான் முதலமைச்சர் வெளிநாடு சென்றிருந்தபோது ஊவா மாகாணத்தின் பதில் முதலமைச் சராகப் பொறுப்பேற்று கடமைகளை சிறப்பாகச் செய்துவந்தார். இவர்தான் இலங்கையிலுள்ள ஆக வயதில் குறைந்த பதில் முதலமைச்சராவார். அத்துடன், மலையகத் தமிழர்களில் ஆகக் குறைந்த வயதுடைய அமைச்சரும் இவர்தான்.
டாக்டர் அப்துல் கலாம் போன்ற ஒரு உன்னதமான கல்விமானின் அறி வுரையினால் இன்று நான் ஊவாமாகாண தமிழ் பாடசாலைகளை மறுமலர்ச்சி அடையச் செய்யும் அளவுக்கு மனப்பக்கு வத்தை பெற்றுக்கொண்டேன் என்று அவர் பெருமையாகக் கூறுகின்றார்.
பொதுவாக பாடசாலை அதிபர்கள் தாங்கள் விரும்பிய அபிவிருத்தித் திட் டங்களையே தமது பாடசாலைகளுக்குச் செய்வதில் ஆர்வம் காட்டுவதைப் புரிந்துகொண்ட தான், அதற்குப் பதில் பாடசாலை அதிபர்களின் குழுவொன்றை ஏற்படுத்தி அவர்களை ஒவ்வொரு பாடசாலைக்கும் விஜயம் செய்யவைத்து இந்தப் பாடசாலைக்கு எது அவசியம் என்பதை அவர்கள் ஆராய்ந்து சமர்ப்பிக்கும் அறிக்கையை நான் நிறைவேற்றிவருகின்றேன் என்று கூறினார்.
இதனால் முன்னர் நகரப் புற பாடசாலை களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாட சாலை அபிவிருத்தித்திட்டங்கள் இப்போது இம்மாகாணத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்து வதற்கான ஒரு புதிய யுகம் உருவாகியிருக் கிறது என்று கூறினார்.
எனது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் ஊவா மாகாண பாடசாலை பிள்ளைகளின் போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்காக ஏழு பஸ்களை எமக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இதனால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பிள்ளை களும், ஆசிரியர்களும் நேரகாலத்துடன் பாடசாலைக்கு வந்து வீடு திரும்பக் கூடியதாக இருக்கிறது என்றும் திரு.செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
2009இல் தான் ஊவா மாகாணசபையில் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டு சமூக சேவைகள் அமைச்சராக இருந்தபோது எல்லாமாக 35 ஆயிரம் பேருக்கு வாழ் வாதார நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் கடந்த 25 வருடங்களாக 450 தோட்டப் பிரதேச மக்களுக்கு மாத்திரமே இந்த உதவி கிடைத்தது. ஆயினும், இவ்வாண்டில் தோட்டப் பகுதி மக்களுக்கு 10,270 வாழ்வாதார உதவிப் பணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு தான் வகைசெய்தி ருப்பதாகவும் திரு.செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் 42 வைத்திய முகாம்களை வெற்றிகரமாக நடத்தியதாகவும் அதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையைப் பெற்றதுடன் மூக்குக் கண்ணாடிகளை இலவசமாகப் பெறக் கூடியதாக இருந்தது என்றும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.