......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 December 2012

யால வனவிலங்குகள் விபத்துகளால் உயிரிழப்பு; வேகத்தடை ஏற்படுத்த நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேன


நிரூஷி விமலவீர
கதிர்காமம் - பாணமை நெடுஞ்சாலை:
யால வனவிலங்கு சரணாலயத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் பாணமையில் இருந்து கதிர்காமம் வரை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய நெடுஞ்சாலை இந்த சரணாலயத்தின் விலங்குகளுக்கு பேராபத்தை ஏற்படுத்துவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நெடுஞ்சாலை யால சரணாலயத்தின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதனால் அந்த நெடுஞ்சாலையை இருமருங்கிலும் உள்ள வன விலங்குகள் கடந்து செல்லும் போது அவை அதிவேகமாக செல்லும் வாகனங்களினால் மோதுண்டு கொல்லப்படுகின்றன.
இதுபற்றி தினகரனுக்கு கருத்து தெரி வித்த வனவிலங்கு மற்றும் கமநல சேவை பிரதி அமைச்சர் எஸ்.எம். சந்திர சேன யால வனவிலங்கு சரணாலயம் அங்குள்ள விலங்குகளுக்கு வாகனங்களினால் தீங்கிழைக்கப்படுவதை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதென்று தான் தீர்மானித்திருப்பதாக கூறினார்.
இந்த சரணாலயத்துக்குள் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைத்துச் சென்றால் பாதையைக் கடக்கும் மிருகங்களுக்கு ஆபத்து ஏற்படாது என்று தெரிவித்த அமைச்சர் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக வேகத்தடைகளை இடையிடையே நிர்மா ணிப்பதென்றும் இந்தப் பாதையில் வேகத்தைக் குறைத்து வாகனத்தை செலுத்தவேண்டும் என்றும் பல இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளை வைப்பதற்கும் தமது அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களினால் மோதுண்டு ஒரு யானை, ஒரு கரடி, ஒரு சிறுத்தை உட்பட பல குரங்குகளும் எருமைகளும் காட்டுப் பன்றிகளும் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் வாகனங்கள் அதிவேக மாக செல்வதனால் அது யால சரணாலயத் தில் உள்ள விலங்குகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இந்த அதிர்ச்சி வன விலங்குகளின் நீண்ட ஆயுளுக்கு தீங்கி ழைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE