தம்புள்ள தினகரன் நிருபர்
வீட்டிலுள்ளோரை கட்டிவைத்து பணம், நகைகள் அபகரிப்பு
தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் கைகால்களைக்கட்டி வாய்களுக்குப் பிளாஸ்டர் இட்டு, அறையொன்றினுள் பூட்டிய பின்னர் பணம், நகைகள் என்பவற்றைக் கொள்ளைக் கும்பலொன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவமொன்று தம்புள்ளயில் நடந்துள்ளது. தம்புள்ள - எத்தாபெந்திவெவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரி என். ஜே. வீரசிங்ஹ தெரிவித்தார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் தெரிய வந்திருப்பதாவது :-
வீட்டின் மின் தொடர்பு மற்றும் தொலைபேசித் தொடர்புகளை முற்றாகத் துண்டித்த பின்னர், பொலிசார் வந்திருப்ப தாகத் தெரிவித்து கதவைத் திறக்கச்செய்து வீட்டினுள் அத்துமீறிப் பிரவேசித்த நால்வர் வீட்டுரிமையாளர் மற்றும் அவரது மனைவி, 15 வயதுடைய மகன், 12 வயது மகள் ஆகியோரின் கால்களைக் கட்டி வாய்களை மூடி பிளாஸ்டரிட்ட பின் அறையொன் றினுள் தள்ளிப் பூட்டிய பின்னர் ஒரு மணி நேரமாக வீட்டினுள் தேடுதல் நடத்திக் கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது. கைத்துப்பாக்கி மற்றும் கிரனைட் ஒன்றும் இவர்களிடமிருந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட பணம் தங்க நகைகள் என்பவற்றின் பெறுமதி 4 இலட் சத்து 79 ஆயிரம் ரூபா எனக் கூறப்படுகின்றது. வீட்டிலிருந்து வெளியேறிய கொள்ளையர் வீட்டுரிமையாளரின் மோட்டார் வாகனத்தின் சாவியையும் வீட்டை அடைத்து வீட்டின் சாவியையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
இக் கொள்ளை தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் தம்புள்ள பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.