கணவர் வெளிநாடு செல்வதை தடுக்குமாறும் உத்தரவு
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க எவ்விதம் இவ்வளவு பெரும் தொகை சொத்துக்களை வைத்திருக்கிறார் என்பது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பற்றிய ஆணைக்குழு விசாரணைகளை ஏற்கனவே நடத்தி வருவதாக அறிவிக்கப்படுகிறது.
இதேவேளையில், அவரது கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசத்துக்கும் வெளிநாடு செல்வதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளதென வாராந்த ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபற்றித் தகவல் தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபந்தி, பிரதம நீதியரசர் பெருமளவு சொத்துக்களை முடக்கி வைத்திருக்கிறார் என்று எமக்குக் கிடைக்கப் பெற்ற ஒரு முறைப்பாட்டை நாம் விசாரணை செய்வதற்கு நடவடிக்கை களை எடுத்துவருகிறோம் என்று தெரி வித்தார். முறைப்பாடு செய்தவர் யார் என்ற விபரத்தை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
இலஞ்ச மற்றும் மோசடி ஆணைக்குழு வின் வரலாற்றில் இதுவே முதல் தடவை யாக பதவியிலிருக்கும் பிரதம நீதியரசர் ஒருவரின் சொத்துக்கள் பற்றிய விசாரணைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. முதலில் தாங்கள் பிரதம நீதியரசருக்கு எவ்விதம் இவ்வளவு தொகையை முடக்கிவைத்துள் Zர்கள் என்று எழுத்துமூலம் விளக்கம் கோருவோம் என்றும், அதற்குப் பின்னரே விசாரணைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழுவின் அதிகாரியொரு வர் தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் பிரதம நீதியரசர் மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என்பதை கண்டறிந்துள்ளார்கள். இதில் ஒரு குற்றச்சாட்டு பிரதம நீதியரசர் ஒரு நீதித் துறை உயரதிகாரியாக இருந்தும் தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரத்தை வெளியிடத் தவறியமையாகும். தேசிய அபிவிருத்தி வங்கியில் 20ற்கும் மேற்பட்ட வங்கி வைப்புக்கள் வைத்திருந் தமை குறித்தும் பிரதம நீதியரசரிடம் விளக்கம் கோரப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட 60ற்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக சொத்துக் களை முடக்கிவைத்திருப்பதாக ஆணைக் குழுவுக்கு இவ்வாண்டின் முற்பகுதியில் முறைப்பாடுகள் வந்திருப்பதாக ஆணைக் குழுவின் தலைவர் தெரிவித்தார். இதே வேளையில், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு திரு.பிரதீப் காரியவசத்தை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கலாகாது என்றும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர் திரு. பிரதீப் காரியவசத்துக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். பினான்ஸ் கம்பனி என்ற நிறுவனத்தில் ஒரு பங்கு 49.70 ரூபா என்ற அடிப்படையில் வாங்கியதனால் தேசிய சேமிப்பு வங்கிக்குப் பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.