சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு 15 வருடமாக இருந்த வலிப்பு வியாதி 'சம்சம்" நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தை தழுவியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜூ என்ற அப்பெண் தனது பெயரை பரீதா என மாற்றியுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு சம்சம் நீரை அருந்தியதாகவும் இரு வாரங்களில் தனது நோய் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் சவூதியைச் சேர்ந்த ஹைல் நகரிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(veerakesari)
சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றும் இலங்கையர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஸம்ஸம் தண்ணீரை குடித்தமையினால் குறித்த பணிப்பெண்ணுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த வலிப்பு நோய் குணமடைந்துள்ளது.
இதனாலேயே பணிப்பெண் இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். புனித மக்கா நகரிலிருந்து ஸம்ஸம் தண்ணீரை கொண்ட வந்த இந்த பணிப்பெண்ணின் எஜமான் முடியுமான அளவிற்கு குடிக்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்த தண்ணீரை சுமார் இரண்டு வாரங்களிற்கு குடித்துள்ளார். இதனையடுத்து வைத்தியர்களை இந்த பணிப்பெண் சந்தித்த போது நீண்ட காலமாக இருந்து வந்த வலிப்பு நோய் குணமடைந்துள்ளது என தெரிவித்துள்ளர்.இதனால் இஸ்லாத்தை தழுவிக்கொண்ட இந்த பணிப்பெண், தனது பெயரை பரீதா எனவும் மாற்றியுள்ளார்
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.