......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருவதாக தகவல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை போராட்டங்களை நடத்தப்போவதாக பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் அறிவித்துள்ளனர்.


இதனையடுத்தே சிங்கள மாணவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளின் ஏற்பாடுகள் மற்றும் ஸ்ரீரெலோ அலுவலகத்தின் மீதான குண்டுத் தாக்குதல் என்பவை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE