......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

சேர்பியாவில் இரத்தக்காட்டேரி பீதி!


சேர்பியாவில் ஷரோஷ்ஜீ என்ற கிராமத்தில் இரத்தக்காட்டேரி பீதி நிலவுகிறது. அங்கு ‘சவா சவானோவிக்‘ என்ற இரத்தக்காட்டேரி உலாவுதாகவும், அது தனது கண்ணில் பட்டவர்களை கொன்று அவர்களின் இரத்தத்தை குடிக்கும் என்ற பயம் பொது மக்களிடையே உள்ளது.


எனவே, அங்கு வாழும் மக்கள் தங்களுடன் வெள்ளைப் பூண்டு, மரசிலுவைகள் ஆகியவற்றை எடுத்து செல்கின்றனர். இவைகளை தங்களுடன் வைத்திருந்தால் இரத்தக்காட்டேரி தங்களை அண்டாது என நம்புகின்றனர்.


ஷரோஷ்ஜீ கிராமத்தில் உள்ள ‘சவா சவானோவிக்’ என்ற இரத்தக்காட்டேரி ஓக்மர காட்டிற்குள் உள்ள மர அறுவை மில்லில் தங்கியிருந்ததாக கருதப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அந்த மில் கட்டிடம் இடிந்து விட்டது.

எனவே, அங்கிருந்து வெளியேறிய இரத்தக்காட்டேரி தான் வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கு தீராத கோப வெறியுடன் அலைவதாக அப்பகுதி மக்கள் கதை போன்று கூறிவருகின்றனர். இரத்தக் காட்டேரி பீதியால் அந்த கிராமத்தின் சுற்றுலா தொழிலும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE