காசாவில் இருக்கும் பதா பிரிவின் உயர் மட்டக் குழு உறுப்பினர் ஜமால் உபைத் ‘மான்’ பத்திரிகைக்கு இந்த தகவலை உறுதி செய்தார். ஹமாஸ் அமைப்பின் இந்த முடிவு குறித்து தமது கட்சிக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
எகிப்துக்கு தப்பிச் சென்ற பதா உறுப்பினர்கள் மீண்டும் காசாவுக்கு வர அனுமதிக்கப் படுகின்றனர் என ஹமாஸ் உள்துறை அமைச்சின் பேச்சாளர் இஸ்லாம் ஷஹ்வான் கூறினார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஹமாஸ் - பதா அமைப்புக ளுக்கு இடையிலான மோதலில் சுமார் 400 பதா உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறியதோடு 56 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் 2007 மோதலுடன் தொடர்புடை யோருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு இரு தரப்பினரும் இணங்கியதைத் தொடர்ந்தே ஹமாஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் கீழ் மேற்குக்கரை சிறையில் இருந்து ஹமாஸ் அரசியல் கைதிகளை விடுவிக்க பதா கடந்த வாரம் இணங்கியது. கடந்த 2006 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பு வென்றதைத் தொடர்ந்து ஹமாஸ் - பதா அமைப்புகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது. ஹமாஸ் அமைப்பு காசாவை ஆளுவதோடு, ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பதா அமைப்பு மேற்குக் கரையை ஆண்டு வருகிறது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.