......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 4 December 2012
காதலிக்கு மயக்கமூட்டி பாலியல் குற்றம் புரிந்த காமுகக் காதலன்: 2 வருடகால துரோகம்
By AM. Rizath
இங்கிலாந்தில் இளம் பெண்ணொருவரை கடந்த 2 வருடமாக தூங்க வைத்து வல்லுறவுக்குட்படுத்தி வந்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயர் நவோமி ஹெம்ப்சன். இவரது காதலர் பெயர் ரொபர்ட் பிரையர். 27 வயதாகும் நவோமி தனது காதலனிடம் சிக்கி கடந்த 2 வருடமாக வல்லுறவுக்குள்ளாகியுள்ளார்
ரொபர்ட், தினசரி தனது காதலிக்கு இரவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விடுவார். நவோமி ஆழ்ந்த தூக்கத்திற்குப் போன பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து உறவு கொண்டு வந்துள்ளார். மேலும் இதை கையடக்கத்தொலைபேசியிலும் படம் எடுத்து அதை தனது கணனியிலும் பதிவு செய்து வைத்து வந்துள்ளார்.
பலாத்காரம் செய்வதற்கு முன்பு தனது காதலியின் விரல் நகங்களுக்கு நகப்பூச்சு பூசியும், நகைகளை அணிவித்தும் அலங்காரப்படுத்திய பின்னரே இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
காலையில் கண் விழித்துப் பார்க்கும் நவோமிக்கு தன் உடலில் நகைகள் இருப்பதும், நகப்பூச்சு பூசப்பட்டிருப்பதும் குழப்பத்தை தந்துள்ளது. இதுகுறித்து ரொபர்ட்டிடம் கேட்டால், ஏதாவது பதில் சொல்லி சமாளித்துள்ளார்.
இந்த நிலையில்தான் ரொபர்ட் குறித்துப் பொலிஸாருக்குத் தெரிய வரவே அவர்கள் அதிரடியாக வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போதுதான் அவரின் செயல் பொலிஸாருக்கும், நவோமிக்கும் தெரிய வந்து அதிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து நவோமி கூறுகையில், அவன் எனது காதலனே இல்லை. சாத்தான். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்துள்ளான். பொலிஸார் மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அழிந்தே போயிருப்பேன் என்றார் அழுதபடி.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.