பாப்பரசரிடம் கேட்கப்பட்டிருக்கின்ற கேள்விகளுக்கான பதில்களை அவரே டிசெம்பர் 12 ஆம் திகதி முதல் டிவிட் தகவல்களாக வெளியிடத் தொடங்குவார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆங்கிலத்திலும் அரபு உள்ளிட்ட ஏனைய 7 மொழிகளிலும் பாப்பரசர் பதில்களை அளிப்பார் என்றும் அந்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு செய்தி சேவைகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
பாப்பரசரின் உயர் பீடத்தை குறிப்பதாகவும் பாலம் அமைப்பவர் என்ற பொருளிலும் அமையும் பொருட்டேpontifex என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அதிகாரி கூறினார்.
வத்திக்கான் கத்தோலிக்க திருச்சபை ஏற்கனவே சமூகவலைத்தளங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.
உலகளாவிய ரீதியில் ரோமன் கத்தோலிக்கத் தலங்களை இணைக்கின்ற இணைய பக்கமொன்றை வத்திக்கான் அண்மையில் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.