......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

யாசிர் அரபாத்தின் உடலிலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு


தோண்டி எடுக்கப்பட்ட பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் உடலில் இருந்து 60 மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக அவரது மரணம் குறித்து சோதனை மேற்கொள்ளும் சுவிட்சர்லாந்து நிபுணர்களை மேற்கோள்காட்டி சுவிட்சர்லாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட மாதிரிகள் யாசிர் அரபாத்தின் மரணம் குறித்து தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளும் சுவிட்சர்லாந்து- பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நிபுணர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வெளியாக மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு பிரான்ஸில் தனது 75 ஆவது வயதில் மரணமடைந்த யாசிர் அரபாத்தின் உடைமைகளில் பொலொனியம் எனும் ஆட்கொல்லி கதிரியக்கம் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 27ஆம் திகதி ரமல்லாவில் இருக்கும் அடக்கஸ்தலத்தில் இருந்து யாசிர் அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சோதனைகளுக்காக மாதிரிகள் பெறப்பட்ட பின் அன்றைய தினமே மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் யாசிர் அரபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதியானால் அது குறித்து ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிடுவதாக பலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.

(thainakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE