......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

செருப்பினால் மோப்ப நாயிடம் சிக்கிய திருடர்கள்

பொலிஸ் மோப்ப நாயொன்று செருப்பை சுமார் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் கௌவ்விச்சென்று திருடர்களை கண்டுப்பிடித்துக்கொடுத்த சம்பவம் ஒன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.


பதுளையில் வீடொன்றிலிருந்து மிளகு திருடிய திருடர்கள் நால்வரையே பொலிஸ் மோப்பநாய் நேற்று கண்டுப்பிடித்துக்கொடுத்துள்ளது.

பதுளை மீஹாவத்தையிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பெறுமதியான மிளகு மூடைகள் காணாமல் போயுள்ளன.

சுமார் 165 கிலோகிராம் நிறைகொண்ட மிளகு மூடைகளே காணாமல் போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருடர்களை பொலிஸ் மோப்பநாய் கொண்டு கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்தனர். மிளகு திருடப்பட்டதாக கூறப்படும் வீட்டுக்கு அருகில் கிடந்த செருப்பை கௌவ்விய மோப்பநாய் சுமார் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் சென்று வீடொன்றுக்கு முன்பாக நின்றுள்ளது.

இதனையடுத்து குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மிளகு மூடைகளை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளனர்.

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE