......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

தெரிவுக்குழுவை அவதானிக்க அனுமதி மறுப்பு

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும்போது தெரிவுக்குழுவை அவதானிப்பதற்கு அனுமதி கோரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு நேற்;று செவ்வாய்க்கிழமை மறுத்துள்ளது. 


நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராவதற்காக பிரதம நீதியரசர் ஏழு சட்டத்தரணிகளுடன் சென்றார். பிரதம நீதியரசரின் வருகையை முன்னிட்டு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு 10.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணிக்கு மதிய போசனத்திற்காக நிறுத்தப்பட்டது. 

தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பிரதம நீதியரசருக்கு மதிய போசன உணவு வழங்க முன்வந்த போதும் பிரதம நீதியரசர் அதனை நிராகரித்து விட்டார்.

மதிய போசனத்தின் பின் 2.45 மணிக்கு பிரதம நீதியரசர் நாடாளுமன்றத்திற்கு வந்தார். உதவி படைக்கல சேவிதர் பிரதம நீதியரசரை நாடாளுமன்ற தொகுதி வாசலில் வரவேற்றார். சென்ற தடவை போலன்றி கடமையிருந்து பொலிஸார் இம்முறை பிரதம நீதியரசருக்கு மரியாதை செலுத்தினர்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆவண ரீதியாக சான்றுகள் சமர்ப்பிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு தவறியுள்ளது பற்றி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் சட்டத்தரணிகள் ஆட்சேபித்தனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயன்முறைக்கான நியமங்களை அறிய தனது கட்சி விரும்புவதாக பிரதான எதிர்க்கட்சியின் கொறடா ஜோன் அமரதுங்க கூறினார்.

இதேவேளை தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை அவதானிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுமதி கோரியிருந்தது. அதற்கான அனுமதியை வழங்குவதற்கு தெரிவுக்குழு மறுத்துவிட்டது.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE