......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

குற்றவியல் பிரேரணைக்கு மதுபானம்,உணவு அளித்து ஆதரவாளர்களை அரசு அழைப்பு: சரத் பொன்சேகா

பிரதம நீதியரசருக்கு எதிராக ஆளுங் கட்சியின் குற்றவியல் பிரேரணை பழிவாங்கும் செயலாகும். இதற்கு ஆதரவு தேடிக் கொள்ள மதுபானத்தையும் உணவுப் பொதிகளையும் கொடுத்து அழைத்து வருகின்றமை வேடிக்கையாக உள்ளதுடன் இந்த நாட்டின் சட்ட ஆட்சி தொடர்பில் மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். 



பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவாக நேற்று உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இவர் தொடர்ந்தும் கூறுகையில்,
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதிலும் அதனை நியாயமான முறையிலும் நீதியான வழிகளையும் கையாண்டு விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். 

அவ்வாறு அல்லாது உணவுப் பொதிகள், மதுபானம் என்பவற்றை கொடுத்து அதற்கு எதிராக கூட்டத்தை அழைத்து வந்து மிகவும் அநாகரிகமான முறையில் பாராளுமன்ற வளாகத்திலும் நீதிமன்ற வளாகத்திலும் நடந்து கொள்கின்றமை கண்டிக்கப்பட வேண்டும். இவற்றினூடாக அரசாங்கத்தின் நேர்மையற்ற தன்மையும் இயலாமையுமே வெளிப்படுகின்றது என்றார்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE