......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 22 December 2012

'கடந்தகால முன்மாதிரிகளின் அடிப்படையிலேயே செயற்படுவோம்'


பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி
சபாநாயகருக்கும், பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் கடந்த கால முன்மாதிரிகளின் அடிப்படையில் செயற்படப்போவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

சபாநாயகர், பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்தபோதே பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கு முன் உச்சநீதிமன்றம் அழைப்பாணை விடுத்தபோது செயற்பட்டதன் பிரகாரமே மேற்படி அழைப்பாணை தொடர்பிலும் செயற்படுவதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பான பாராளுமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 9வது சரத்து தொடர்பில் நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களும் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய நிலைமை தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க வழங்கியிருந்த தீர்ப்பை அன்றிருந்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஏற்றுக்கொண்டதாகவும் பிரதி சபாநாயகர் கூறினார்.


(thinkaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE