......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 December 2012

ஆடைகளை களைந்து 'சக்வித்தி' கூச்சல்

105 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சக்வித்தி நீதிமன்ற சிறைக்கூண்டுக்குள்ளும், சிறைச்சாலை பஸ்ஸிலும் தனது ஆடைகளை களைந்து கூச்சல் குழப்பமிட்டார்.


சக்வித்தி மற்றும் அவரது மனைவியான குமாரி ஆகிய இருவரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவ்விருவருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் அஜித் எம்.மானசிங்க அவ்விருவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய கைதிகளுடன் நீதிமன்றத்திற்கு இருவரையும் அழைத்துவந்த சிறைச்சாலை அதிகாரிகள் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் சிறைக்கூண்டுக்குள் அனுப்பினர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பித்தவேளையில் உள்ளாடை தவிர சகல ஆடைகளையும் களைந்து வீசிய சக்வித்தி உரத்த குரலில் சத்தம் எழுப்பினார்.

தான் நிரபராதி இதற்கு அரசாங்கமும் பொலிஸும் பொறுப்பு கூறவேண்டும் என்றும் கூச்சலிட்ட அவர் சிறைச்சாலையில் தன்னை தாக்குவதாகவும் துன்புறுத்துவதாகவும் சத்தமிட்டார்.

கழற்றி வீசப்பட்ட ஆடைகளை அவருக்கு அணிவித்த சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சிறைச்சாலை பஸ்ஸில் அவரை ஏற்றினர். பஸ்ஸில் ஏற்றப்பட்டதன் பின்னரும் அவர் தனது  ஆடைகளை களைந்து கூச்சலிட்டார். 

ஆங்கில ஆசிரியரான இவர் ஆகக்கூடுதலான வட்டியை தருவதாக கூறி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடம்; 105 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றஞ்சாட்டின் பேரிலேயே  அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் அவர் தனது மனைவியுடன் 2008 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தப்பிச்சென்று மீண்டும் நாட்டிற்கு திரும்பி மணல் ஏற்றியிறக்குபவரை போல, தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் போல கடமையாற்றிய போதே அவரை 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE