முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் ஒரு சிறந்த கனவான். அவர் தெரி வுக்குழு விசாரணையில் மனமுவந்து கலந்து கொண் டதுடன் தெரிவுக்குழுவுக்கு பூரண ஒத்துழைப்பையும் வழங்கினார்.
இந்த குற்றப் பிரேரணைகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிaர்களா என்று கேட் டபோது, அவர் ஆம். ஏற்றுக் கொள்கி றேன். நான் வெளியிட்ட வேறு இர ண்டு கருத்துக்களும் இந்தக் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை.
அதனையும் சேர்த்துக் கொள் ளுங்கள் என்று கூறும் அளவுக்கு சட் டத்தையும், நீதியையும், பாராளு மன்றத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து நடந்து கொண்டார் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற குற் றப்பிரேரணையில் உள்ள முதலாவது மற்றும் இரண்டா வது குற்றச்சாட்டுகள் அவர் செய்த தவறுகளை அப்பட்ட மாக எடுத்துக் காட்டுகின்றன. ஏனைய குற்றச்சாட்டுகள் வெறுமனே நிர்வாக சீர்கேடுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு அந்தளவுக்கு அவசியமி ல்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உங்களில் ஒருவர் பிரதம நீதியரசரை தகாத வார்த்தைகளால் பேசி விரட்டியதாக பேச்சு அடிபடுகிறதே அது உண்மையா என்று கேட்டதற்கு பதிலளித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, நாம் எந்த சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசரை தரக்குறைவாக நடத்தவில்லை. அவருடைய சட்டத்தரணி களையும் மிகவும் கெளரவமாகவே நடத்தினோம் என்று கூறினார். ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இந்த விசாரணை தொடர்பான முரண்பாடுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை அழைத்து விசாரணை செய்வதற்கும் பிரதம நீதியரசரின் சட்டத்தரணிகளுக்கு அனுமதிக்கவும் நாம் தயாராக இருந்தோம்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டத்தொடர் வீடியோ நாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியும். நாம் அவரது சட்டத்தரணியான நZன் லத்துவஹெட்டிக்கு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருந்ததனால் காலையில் பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்திற்கு கஷ்டமாக இருக்குமென்று அவர் கூறிய போது, நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் உதவுவது போன்று நாம் அன்றைய கூட்டத்தை பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்தோம் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அலரிமாளிகையில் ஜனாதிபதி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய நிகழ்வில் அமைச்சர்கள் மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, விமல் வீரவன்ச, மைத்திரிபால சிறிசேன, கெஹெலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்ஷ, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த ஆகிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த சில முக்கிய அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். உங்களுக்கு செய்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது நான் எப்போதும் செய்தியை உருவாக்கி உங்களுடைய தேவையை நிறைவேற்றுகி றேன் என்று ஜனாதிபதி ஊடகவியலா ளர்களை பார்த்து நகைச்சுவையாகப் பேசினார். சுயாதீன குழு பற்றிக் குறிப் பிட்ட அவர், பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை அறிக்கையை வரிக்கு வரி வாசிப்பதற்கு எனக்கு நேரமில்லை.
அதனால் நான் சுயாதீன குழுவொன்றை அமைத்து இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்து எனக்கு அதுபற்றி விளக்கிக் கூறுமாறு கேட்கவிருந்தேன். இதை வைத்துக் கொண்டு நான் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ, நிராகரிக்கிறேன் என்றோ தப்புக்கணக்கு போடக்கூடாது என்று சொன்னார்.
பிரதம நீதியரசர் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறியது பாராளுமன்றத்தை அவமதிப்பதற்கு ஒப்பான ஒரு செயலாகும். இது போன்று ஒரு சாதாரண மனிதன், ஏன் ஒரு அமைச்சர் கூட நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினால் நிச்சயம் அவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டிருப்பார். ஆனால், நீதிமன்ற சுதந்திரத்தின் பாதுகாவலரான பிரதம நீதியரசர் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து இந்த தெரிவுக்குழுவின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி வெளியேறியது பாராளுமன்றத்தை அவமதிக்கும் ஒரு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் விவகாரத்தை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டுமென்று அமெரிக்க ஜனாதிபதி உங்களிடம் தொலைபேசியில் அழுத்தம் தெரிவித்ததாக செய்திகள் பரவியிருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் ஜனாதிபதியிடம் கேட்ட போது, அப்படி ஒருவரும் என்னிடம் பேசவில்லை என்று ஜனாதிபதி சொன்னார். இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு பத்திரிகை ஆசிரியர் ஜனாதிபதி அவர்களே நீங்கள் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிக்க இருக்கிaர்களா? என்று கேட்டார். அதற்கு ஜனாதிபதி, அதற்கான அவசியம் ஏற்படும் போது அதுபற்றி சிந்திக்கலாம் என்று பதிலளித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு கருத்து தெரிவிக்கையில், பிரதம நீதியரசர் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்ற நோக்கத்திலேயே இந்த விசாரணைக்கு வருகை தந்தார். அதனால் தான் அவர் விசாரணை ஆரம்பிக்கும் போது சத்தியப்பிரமாணம் செய்ய மறுப்புத் தெரிவித்தார். இதில் இருந்து பிரதம நீதியரசருக்கு சட்டத்தையோ, பாராளுமன்றத்தையோ மதிக்கும் எண்ணம் இருக்கவில்லை என்பது புலனாகியது. அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிரான ழி|சிt பிரேரணையை தான் எதிர்கட்சி உறுப்பினராக இருந்த போது திரு. கருஜயசூரிய முன்மொழிந்தார். அன்று அவ்விதம் செய்வது ஒரு நல்ல விசயம் என்று அவர் கருதினார். ஆனால், இன்று அதே கரு ஜயசூரிய நாம் அரசியல் காரணங்களுக்காக பிரதம நீதியரசருக்கு எதிராக இந்த குற்றப்பிரேரணையை தாக்கல் செய்கிறோம் என்று அரசாங்கத்தை சாடிப் பேசுவது நல்லதல்ல என்று சொன்னார்.
ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் மீது குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தாக்கல் செய்த போது பாராளுமன்ற கட்டிடத்திற்கு விசாரணைக்கு வந்த அவர் பிரதம நீதியரசருக்கு உரிய கெளரவத்தைக் கொடுக்காமல் உடல் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு ஒரு சாதாரண மனிதரைப் போன்று பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்பட்டார் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கும் அவரது சட்டத்தரணிகளுக்கும் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சபாநாயகர் ஆகியோர் பயன்படுத்தும் பாராளுமன்ற வாசலில் பிரவேசிப்பதற்கு இடமளித்து பிரதம நீதியரசர் பதவியை நாம் கெளரவித்தோம் என்று கூறினார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஒரு மாத காலத்திற்குள் நிறைவுபெற வேண்டுமென்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை திருத்தப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் ஆர். பிரேமதாஸவே காரணமாகும். அவர் 1984ம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதியன்று அன்றைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோனுக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணையை நீடித்துக் கொண்டு சென்று அவ் உயர் பதவிவகிப்பவருக்கு மனவேதனையை ஏற்படுத்துவதை தடுப்பதற்கு ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டுமென்று தீர்மானித்து இவ்விதம் பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தினார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.