தியாவ்யூ தீவு, இயற்கை எரிவாயு வளம் மிக்கது. இத்தீவுக்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த நிலையில் தீவை உரிமையாளரிடமிருந்து விலைபேசி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது ஜப்பான். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
மேலும் அப்பகுதிக்கு தமது ரோந்து கப்பல்களையும் அனுப்பி வந்தது. தற்போதும் அப்பகுதியில் கண்காணிப்பு கப்பல்களை சீனா நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் தியாவ்யூ தீவு அருகே சீனாவின் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஜப்பான், போட்டியாக எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதனால் கிழக்கு சீனக் கடற்பரப்பில் யுத்தம் வெடிக்கும் அபாயம் உருவெடுத்திருக்கிறது.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.