......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

கால அவகாசம் குறித்து தெரிவுக்குழு இன்று அறிவிக்கும்

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கூடும். தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு கடந்த 23 ஆம் திகதி கூடியதுடன் இரண்டாவது அமர்வு நேற்றுக்காலை 10.10க்கு நாடாளுமன்றத்தின் முதலாம் இலக்க குழு அறையில் கூடியது.

சட்டத்தரணிகளுடன் ஆஜரான பிரதம நீதியரசர் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசத்தை கோரியுள்ளார்.

கால அவகாசம் தொடர்பில் தெரிவுக்குழு இன்று புதன்கிழமை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE