......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

சிரியா தொடர்பில் உடன்பாட்டை எட்டும் ரஷ்யா - துருக்கி முயற்சி தோல்வி


சிரியா நிலைப்பாட்டில் உடன்பாட்டை எட்ட ரஷ்யா, துருக்கிக்கு இடையிலான முயற்சி தோல்வியடைந்துள்ளது. எனினும் இரு தரப்பும் சிரியா தொடர்பில் முரண்படவில்லை என அறிவிக்கப்பட்டு ள்ளது. துருக்கி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த திங்கட்கிழமை துருக்கி பிரதமர் ரிசப் தய்யில் எர்டொகனை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து எர்டொகனுடன் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டில் புடின் கூறியதாவது, “சிரியாவின் நிலைவரம் குறித்து ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் போனது. ஆனால் ஒரு சில விடயங்களில் எமது நிலைப்பாடு ஒத்திருக்கிறது” என்றார்.
இதில் பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என எர்டொகன் கோரினார். எனினும் ஏர்டொகனின் இந்த கூற்றை புடின் நிராகரித்தார். “நாம் சிரிய அரசை பாதுகாப்பவர்கள் அல்ல. அதற்கான நடவடிக்கையை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இது பற்றி நாம் ஆலோசித்து வருகிறோம். கடந்த கால தவறுகள் மீண்டும் ஏற்பட அனுமதிக்க முடியாது” என புடின் குறிப்பிட்டார்.
துருக்கி கடந்த ஒக்டோபரில் மொஸ்கோவிலிருந்து டமஸ்கஸ் நோக்கிச் செல்லும் விமானத்தை இடைமறித்து சோதனை இட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முறுகல் ஏற்பட்டது. இதற்கு ரஷ்யா கடும் கோபத்தை வெளியிட்டது. எனினும் சிரிய பிரச்சினையில் துருக்கி, ரஷ்ய வெளியுறவு அமைச்சுகள் இணைந்து செயற்படும் என எர்டொகன் குறிப்பிட்டார்.
இதில் சிரிய எல்லையில் துருக்கி நேட்டோவின் பெட்ரோயிட் ஏவுகணையை நிறுவுவதற்கு புடின் எதிர்ப்பு வெளியிட்டார். இதன் மூலம் மேற்கு இராணுவ கூட்டணியின் திட்டத்திற்கு அமைய மேலும் பிரச்சினையை அதிகரிக்கச் செய்யும் என குறிப்பிட்டார்.
ரஷ்ய ஜனாதிபதியின் விஜயத்தைத் தொடர்ந்து துருக்கி ரஷ்யாவுக்கு இடையிலான வர்த்தகம் இந்த ஆண்டு இறுதியில் 35 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கி, ரஷ்யாவின் இயற்கை வாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தில் தங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE