நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கல்முனைப்பிரதேச மக்களின் நிலையினை கண்டறிந்து அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று (18) உடனடியாகத் தொடர்பு கொண்டு கல்முனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நிதியினை ஒதுக்கித்தருமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அமைச்சர் மஹிந்த அமரவீர அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதற்கான நிதியினை உடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இது விடயமாக கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் கல்முனைப் பிரிவு கிராம சேவகர்களுடன் அவசர கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கல்முனைப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினை வெளியேற்றுதல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தரவுகளை சேகரித்து, தொடர்ந்தும் மழை பெய்துவந்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தும் பணியினை செய்வதற்கு தயாராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கிராம சேவகர்களை கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எம்.அலி ஜின்னா, பிரத்தியேகச் செயலாளர் தௌபீக் உட்பட கிராம சேவகர்களும் கலந்து கொண்டனர்.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.