குளியாப்பிட்டிய தினகரன், வாரியபொல தினகரன், மாவத்தகம நிருபர்கள்
குருநாகல் மாவட்டத்தில்
குருநாகல் ஆஸ்பத்திரியினுள் வெள்ளம்
குருநாகல் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தெதுறு ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 4000 குடும்பங்கள் முற்றாக பாதிக்கப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளன. பல பாதைகளும் நீரில் மூழ்கியதன் காரணமாக போக்கு வரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. குருநாகல் போதனா வைத்தியசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக வைத்தியசாலை நிர்வாக பிரிவு உட்பட மூன்று வார்ட்டுக்கள் நீரில் மூழ்கியுள்ளன. குருநாகலில் நேற்றும் முன்தினமும் (திங்கள், செவ்வாய்) ஆகக் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்று 345 அங்குல மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக் கப்பட்டது. கடும் மழை காரணமாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாண வர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டி, கிரிமெட்டியானை, நாத் தாண்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள ஐந்து பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதும் மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்கவில்லை. மழை காரணமாக குருநாகலுக்கு வடக்கு பிரதேசமாக உள்ள ரயில் தண்ட வாளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்து இருப்பதால் வடக்கு பகுதிக்கான ரயில் சேவை குருநாகல் வரையுமே இடம்பெறுகின்றன.
பிங்கிரிய, பண்டுவஸ்நுவர, அளவ்வை, நாரம்மலை, வாரியப்பொல, நிக்கவரட்டிய, ஹிரியால ஆகிய பகுதிகளே வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. குரு ¡கல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள் சகிதம் நேற்று காலை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கான உதவிகள் வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.