......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

கச்சதீவு கடலில் தத்தளித்த பத்து இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

கே. அசோக்குமார்
கடல் சீற்றம் தணிந்ததும் அனுப்பி வைக்க ஏற்பாடு
சீரற்ற காலநிலை கடல் கொந்தளிப்பு காரணமாக கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 10 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கச்சதீவுக்கு அருகே இவர்கள் 10 பேரும் மீட்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களுக்குத் தேவையான உணவு, நீர் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் கடல் சீற்றம் குறைந்ததும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கச்சதீவுக்கு அருகே தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது என தமிழக இணையத்தளங்களில் வெளிவந்துள்ள செய்தியை அவர் முற்றாக மறுத்தார்.
நாம் 10 தமிழக மீனவர்களை காப் பாற்றியுள்ளோம் என்று தெரிவித்தார். மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்களையும் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்றும் இவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று மண்டபம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள் ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE