......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

அம்பாறையில் உணரப்பட்ட அதிர்வு பற்றி அறிய விசேட தொழில்நுட்ப வலையமைப்பு


லக்ஷ்மி பரசுராமன்
மூன்று இடங்களில் ‘செஸ்மிக் யுனிட்கள்’
புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் கனியவள பிரிவுஅம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அடிக்கடி உணரப் படுவதாக கூறப்படும் நில அதிர்வுகள் குறித்து ஆராய் வதற்கென அப்பகுதிகளில் விசேட தொழில்நுட்பத்துடன் கூடிய வலையமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் கனியவளப் பிரிவின் தலைவர் கலாநிதி என். பி. விஜயானந்த தினகரனுக்குத் தெரிவித்தார்.
நில அதிர்வின் அளவு, தன்மை, தாக்கம், பலம் மற்றும் அவற் றுக்கிடைப்பட்ட காலப்பகுதி என்பன குறித்து துல்லியமாக அறிந்துக்கொள்ளும் வகையில் 'செஸ்மிக் யுனிட்' (Seismic unit) எனப்படும் மூன்று கருவிகள் அம்பாறையின் வெவ்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கருவியும் நேற்று அதிகாலை இரண்டு கருவிகளும் பொருத்தப்பட்டிருப் பதாகவும் தலைவர் விஜயானந்த சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் செஸ்மிக் கருவிகள் பொருத்தப்பட்டதிலிருந்து எவ்வித நில அதிர்வுகளும் உணரப்படாமையினால் தற்போது அம்பாறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் நில அதிர்வுகள் குறித்து எதனையும் திட்டவட்டமாக தெரிவிக்க முடியாதுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
அப்பிரதேச வாசிகளின் கருத்துக்களை தவிர எம்மிடம் வேறு எந்த வகையிலான சான்றுகளோ ஆதாரங்களோ இல்லாத நிலையில் அது தொடர்பில் எம்மால் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முடியாமலிருந்தது. அதன் காரணமாகவே விசேட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளை பொருத்தியுள்ளோம்.
குறுகிய காலத்திற்குள் சுமார் 20 தொடக்கம் 25 தரங்கள் நில அதிர்வுகளை உணர்ந்ததாக அப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர். அதனைத் தவிர நிலத்தில் வெடிப்புகளோ அல்லது வேறு எந்த வகையிலான தடயங்களோ காண்பதற்கில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
ஊர் மக்களும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவிப்பதனால் எம்மால் எதையும் ஊகிக்க முடியாதுள்ளது. என்றாலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 05 பேர் அடங்கிய எமது குழுவினர் தொடர்ந்தும் இது குறித்து அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE