......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

வட-கிழக்கை பிரித்த நீதிமன்றம் தேசத் துரோகியா?

(அழகன் கனகராஜ்)

இந்த அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு ஏன் பயப்பிடுகிறது எனத்தெரியவில்லை என்பதுடன் வட-கிழக்கை பிரித்த நீதிமன்றம் தேசத் துரோகியா? என ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் உறுப்பினர் தம்மிக்க சில்வா கேள்வியெழுப்பினார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தை அரசாங்கம் தேசத் துரோகி எனக்கூறுகின்றது. அப்படியாயின் வட-கிழக்கை பிரித்த நீதிமன்றம் தேசத் துரோகியா? புலிகளின் தலைவர்களை தம்முடன் வைத்துக்கொண்டு அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது..? 

மரணமடைந்தவர்களுக்காக தென்னிலங்கையிலுள்ள சிங்கள மாணவர்கள் நினைவு கூர்ந்தால் அதுபற்றி எவ்விதமான பிரச்சினையும் இல்லை எனினும் அதனையே தமிழ் மாணவர்கள் செய்தால் இந்த அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது என்று எமக்கு தெரியவில்லை என்றார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE