......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

குழந்தைகள் இந்தியாவில்: பெற்றோர் நோர்வே சிறைச்சாலையில்


By J.Stephan நோர்வேயின் வதிவுரிமை கொண்ட இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி அனுபமா சந்திரசேகர் ஆகிய தம்பதியினர் தற்போது நோர்வேயில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.


மேற்படி தம்பதியரின் 7 வயது மகனான சாய்ராம் மனநல குறைபாடு தொடர்பில் இந்தியாவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலேயே குறித்த பெற்றோர் நோர்வேக்கு அழைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளனர்.

தமது பெற்றோருக்கு நோர்வேயின் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர்களது பிள்ளைகளான சாய்ராம் (7 வயது), அபிராம் (2 வயது) ஆகிய சிறுவர்கள் அறியாதிருப்பதாகவும் இதனால் முழுக் குடும்பமும் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தையான சந்திரசேகருக்கு 18 மாதங்களும் தாய் அனுபமாவுக்கு 15 மாதங்களும் என சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் வதியும் மேற்படி தம்பதியினரின் மகனான சாய்ராம் தன்னை பெற்றோர் துன்புறுத்துவதாக தான் கற்கும் பாடசாலையில் புகார் கொடுத்ததையடுத்து குறித்த பெற்றோரிடமிருந்து சாய்ராமை நோர்வே சிறுவர் காப்பகம் பொறுப்பெடுத்துள்ளது. இதன்பின்னர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட சாய்ராம் மீண்டும் பெற்றோரிடம் மீண்டும்ஒப்படைக்கப்பட்டதையடுத்து சாய்ராமும் அவனது 2 வயது சகோதரரான அபிராமும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்நிலையில் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி அனுபமா ஆகியோருக்கு எதிராக நோர்வே சிறுவர் காப்பகத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் விசாரணை நடவடிக்கைகளில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை அடுத்து மேற்படி தம்பதியர் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி இந்தியாவிலிருந்து நோர்வேக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற தம்பதியினர் நவம்பர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு டிசம்பர் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்தே சாய்ராமை பெற்றோர் கொடுமைப் படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு தந்தைக்கு 18 மாத சிறைத் தண்டனையும் தாயாருக்கு 15 மாத சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
 மேற்படி தம்பதியர் தமக்கு வழங்கப்பட்டதீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE