......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

இலங்கையில் தினமும் சுமார் 1000 சட்டவிரோத கருக்கலைப்புகள்


மர்லின் மரிக்கார்
90 வீதமானோர் திருமணமான பெண்கள்இலங்கையில் தினமும் 
சுமார் ஆயிரம் சட்டவிரோத கருக் கலைப்புகள் இடம்பெறு வதாக மதிப்பிடப்பட் டிருப்பதாக அவிசாவளை பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மருத்துவ நிபுணர் மங்கள திஸாநாயக்கா நேற்றுத் தெரி வித்தார். சட்டவிரோதக் கருக்கலைப்பில் ஈடுபடுபவர்களில் 90 சதவீதமானோர் திருமணமான பெண்களெனவும் அவர் குறிப்பிட்டார்.

இனவிருத்தி ஆரோக்கியம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்து வதற்கான செய்தியாளர் மாநாடொன்றை இலங்கை குடும்ப திட்ட சங்கம் அதன் தலைமையகத்தில் நேற்று ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் விசேட வளவாளர்களில் ஒருவராக பங்குபற்றிய மருத்துவ நிபுணர் மங்கள திஸாநாயக்கா, இலங்கையில் கருக்கலைப்பு சட்ட ரீதி யாகத் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு 1883 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தாலும் கருக்கலைப்பு இடம்பெறவே செய்கின்றது.
இது பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி தினமும் ஆயிரம் சட்டவிரோதக் கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன. இதன்படி வருடத்திற்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை இவ்வகைக் கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன.
இக்கருக்கலைப்பில் 90 வீதம் திருமணமான பெண்களே ஈடுபடுகின்றனர். இதற்கு வறுமை, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பிள்ளைகள் பராமரிப்பது கஷ்டம் என்பவற்றை அவர்கள் முக்கிய காரணங்களாகக் கூறுகின்றனர்.
ஆனால் சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியற்றவர்களாவர். இதன் விளைவாக பலவிதமான பக்க விளைவுகளுக்கு கருக்கலைப்பு செய்யும் பெண்கள் உள்ளாகின்றனர்.
சட்டவிரோத கருக்கலைப்பின் போது அளவுக்கு அதிகமாக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு பெண்கள் உயிரிழக்கவும் செய்கின்றனர். 2010 ஆம் ஆண்டில் மாத்திரம் இவ்வாறு 140 பெண்கள் மரணித்துள்ளனர். சட்டவிரோத கருக்கலைப்பின் விளைவாக ஏற்படுகின்ற மரணங்கள் 2009 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திலேயே இருந்தன. அது 2010 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
ஆகவே சட்டவிரோத கருக்கலைப்புகளின் பாதிப்புகளை உணர்ந்து அவற்றைத் தவிரிந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கொழும்பு டி செய்ஸா ஆஸ்பத்திரியின் மருத்துவ பேராசிரியர் அத்துல களு ஆராய்ச்சி சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷார ஒகஸ், பெண் நோயியல் மருத்துவ நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்கா, குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் டொக்டர் வத்ஸலா ஜயசூரிய உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE