......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

மட்டக்களப்பில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆடைகள் மீட்பு

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மட்டக்களப்பில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்ட  ஆணின் ஆடைகள் சிலவற்றையும் மற்றும் ஒரு சோடி காலணியையும் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை காலை
மீட்டுள்ளனர்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிச்நகர் ரயில் வீதிக்கு அருகிலேயே இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆடைகளும் காலணியும் மீட்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் இவற்றை மீட்டுள்ளனர். 

ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிர்வாகப் பொறுப்பதிகாரி கே.ஜீ.சந்திரசேகர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர். 






(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE