சிசுவொன்றை கொலை செய்ததாக நாபிக்கிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சவூதி முடிக்குரிய இளவசரர் சல்மன் பின் அப்துல் அசீஸ் அல் சாட் அறிவித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்டுள்ள மன்னருக்கு ஆசி வேண்டி இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2007ம் ஆண்டு முதல் சவூதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டள்ள ரிசானா அநேகமாக விடுதலை செய்யப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டோர் பட்டியலில் ரிசானாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ரிசானாவை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.