......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம்- சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

By Lambert 
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதிவான் இ.கயஸ் பல்டானோ உத்தரவிட்டுள்ளார்.


மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 43 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 6 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த 7 சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தொடர்ந்தும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE