......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 31 December 2012

அந்தரங்க உறுப்பை காட்டியவருக்கு அழைப்பு

(லக்மல் சூரியகொட)

கடுகதி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது தனது அந்தரங்க உறுப்பை  ஆசிரியை ஒருவருக்கு காட்டியதாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.


இரண்டு பிள்ளைகளின் தாயாரான தான், கல்கிசையில் வைத்து கொழும்பு கோட்டை ரயிலில் ஏறியதாகவும், தான் 3ஆம் வகுப்பு ஆசனத்தில் இருந்தபோது தன் முன்னால் நின்றவர் தனது அந்தரங்க உறுப்பை தனக்கு காட்டினார் எனவும் முறைப்பாட்டாளர் கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். 

சந்தேகநபரை கோட்டை ரயில் நிலைய பொலிஸார் கைது செய்து கொழும்பு கோட்டை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 

கட்டுவானையை சேர்ந்த சந்தேக நபரை ஜனவரி 7ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு வருமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். இவர் தற்போது பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 





(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE