......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 1 January 2013

தமிழகத்திலிருந்து கடல்வழியாக வந்த ஏழு பேரும் பிணையில் விடுதலை


தமிழகத்திலிருந்து கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் இலங்கை வந்த 7 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுவர்கள் ஒரு சிறுமி உட்பட 7 பேர் கடல் வழியாக இலங்கைக்குள் வந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வட மத்திய மாகாணத்தின் தம்மென்னா கடற்படைத் தளத்தின் கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போதே மன்னார் கடற் பிரதேசத்தில் வைத்து இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து நகை, பணம் உட்பட உடைமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் பொலிஸார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE