......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 31 December 2012
நைஜீரியாவில் 15 கிறிஸ்தவர்கள் படுகொலை
நைஜீரியாவில் 15 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவில், போகோ ஹராம் என்ற தீவிரவாத குழுவினர் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்த அரசு நாட்டின் வடக்கிலுள்ள மைதுகுரி பகுதியில் புதிய அதிரடிப் படையினரை பணியில் அமர்த்தியுள்ளனர்.
அப்பகுதியில் இராணுவத்தினர் வழக்கமாக ரோந்து சென்றனர். அப்போது கிறிஸ்தவர் அதிகம் வசிக்கும் ஒரு கிராமத்தில் 15 பேர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர். இவர்களை தீவிரவாதிகள் கொன்றதையும் அப்பகுதி வாசிகள் உறுதிபடுத்தினர்.
நைஜீரியாவில் வடக்கில் இஸ்லாமியர்களும் மற்றும் தெற்கில் கிறிஸ்தவர்களும் அதிகம் வசித்து வருகின்றனர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.