நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் சற்றுமுன் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினரான ஐ.தே.க. எம்.பி ஜோன் அமரதுங்க, நாடாளுமன்றத்தில் உரையாற்ற முற்பட்ட வேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவரை உரையாற்ற விடாது கூச்சலிட்டுள்ளனர்.
இதன்போது உரையாற்றிக்கொண்டிருந்த ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத், தனது உரையை நிறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உரைகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் தொந்தரவு விளைவித்ததை அடுத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.