நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் குற்றப்பிரேணையை விசாரிப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புதிய சட்டவரைபு ஒன்றை தயாரித்துள்ளது.
குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாயின் பிரதம நீதியரசரை அல்லது உயர் நீதிமன்ற நீதபதியை பதவி நீக்கும் தீர்மானத்ததை விசாரிப்பதற்கு மூவர் கொண்ட பொதுநலவாய நீதிபதி குழுவை நியமிக்கும் வகையில் புதிய சட்டமூலத்தை அக்கட்சி வரைந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த சட்;டமூலத்தை தனிநபர் சட்டமூலமாக வரைந்துள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டத்தின் படி பிரதம நீதயரசரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை கொடுத்தவுடன் சபாநாயகர் ஒரு தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும்.
இந்த குழு குற்றச்சாட்டுகளை விசாரித்து தனது முடிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். குற்றச்சாட்டுகளில் ஏதாவது ஒன்று நிரூபிக்கப்படுமாயின் நாடாளுமன்றம் பிரதம நீதியரசரை பதவி விலக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும்.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்டமூலத்தின் படி சபநாயகரிடம் இவ்வாறான தீர்மானம் சமர்பிக்கப்படும் போது அவர், இலங்கை தவிர ஏதாவது பொதுநலவாய நாட்டின் அதி உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த மூன்று நீதிபதிகளை கொண்ட குழுவை நியமிப்பார்.
இந்த சட்டமூலத்தில் கூறப்பட்ட நீதிபதி குழுவினர், பிரதம நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றச்சாட்டுக்களை நீரூபிக்க அனுமதிக்க வேண்டும்.
அத்துடன் இந்த நடவடிக்கையில் சட்டத்தரணிகள் சங்கம் தனது நியாயங்களை கூற அனுமதிக்க வேண்டும். நீதிபதி குழு தனது நடவடிக்கையை இரண்டு மாதங்களிற்குள் நிறைவு செய்ய வேண்டும். ஆனால் சபாநயகர் இந்த காலத்தை ஒரு மாதத்தினால் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.