......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

பெண்ணிடம் நாகபாம்பை கொடுக்குமாறு உத்தரவு

கொழும்பில் நாகபாம்புடன் நடனமாடிய பெண்ணிடம் அவரது நாகபாம்பை கொடுக்குமாறு  கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.  

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் பாம்புடன் நடனமாடிய இந்தப் பெண்ணை கடந்த ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி பொலிஸார் கைதுசெய்தனர். 

இவர் மீது மிருகவதைக் குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டதுடன், குறித்த நாகபாம்பும் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  

இருப்பினும் இந்த நாகபாம்பை நிபந்தனை அடிப்படையில் அவரிடமே ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.(லக்மால் சூரியகொட)


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE