இயற்கை நீதி கொள்கைகள் பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் பொழுது செல்லுபடியற்றவை என்ற காரணத்தினாலேயே இவர்கள் விசாரணை குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் ஆகியோரே இவ்வாறு விலக ஆலோசிக்கின்றனர்.
பிரதம நீதியரசர் ஆணைக்குழு விசாரணைகளை பகிஷ்கரிக்க தீர்மானம்
இதேவேளை பிரதம நீதியரசர் பாராளுமன்ற விசாரணை குழுவின் விசாரணைகளில் இருந்து வெளியேறியுள்ளார். பிரதம் நீதியரசர் இனி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் எந்த ஒரு விசாரணைகளுக்கும் இனி சமூகளிக்க போவதில்லை என அவரின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விசாரணையில் இரண்டு தரப்பினர் இடையேயும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.
பிரதம நீதியரசரின் வக்கீல்கள் பிரதம நீதியரசர் குற்றவாளி என நிரூபிக்க தேவையான ஆவன சான்றுகள் எதுவும் சமர்ப்பிக்க படவில்லை என தெரிவித்தனர்.
இதேவேளை விசாரணைகளின் பொழுது அமைச்சர்கள் சிலர் பிரதம நீதியரசர் மீது அவதூறுகள் கூறியதாக தெரியவருகின்றது.
இன்று மூன்றாவது தடவையாக தெரிக்குழு முன் பிரதம நீதியரசர் ஆஜராகினர். தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடவுள்ளதாக அறிய வருகின்றது.
தகவல்: டெய்லி மிரர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.