By V.Priyatharshan
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விளையாட்டு மைதானங்களை நவீனமயப்படுத்துவதன் மூலம் மக்கள் அனைவரையும் நடைப்பயிற்சியில் ஈடுபடுத்தும் வகையில் எமது விளையாட்டு கலாசாரத்தை விரிவு படுத்துவோமெனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கையில் புதிய விளையாட்டுக் கலாசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதக்கங்களுக்கும் வெற்றிக்கும் மட்டும் எல்லை வரையறுக்கப்பட்டிருந்த விளையாட்டுத்துறை அமைச்சு சிறுவர் முதல் பெரியவர் வரை நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள அனைவரையும் விளையாட்டுடன் தொடர்புபடுத்தும் நோக்கிலேயே இப் புதிய விளையாட்டுக் கலாசாரம் உருவாக்கப்படுகின்றது.
இதன்படி பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயமாக்கப்படவுள்ளதுடன் ஒவ்வொரு மாணவரும் தாம் விரும்பிய ஏதாவதொரு விளையாட்டுத்துறையை கண்டிப்பாக தெரிவுசெய்தேயாக வேண்டும்.
இதேவேளை, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒவ்வொரு மாணவனையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவதன் மூலம் அவர்கள் எவ்வகையான விளையாட்டில் சிறந்து விளங்குவர் என்பதனை பாடசாலை மட்டத்திலேயே கண்டு கொள்ளவுள்ளோம்.
மேலும் இவர்கள் விளையாட்டுத்துறையில் காட்டும் ஆர்வத்திற்கு புள்ளிகள் வழங்கப்படும். இதேவேளை, தேசிய மட்டத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் இலகுவில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற வழிவகுக்கப்படும். இது தொடர்பான பத்திரத்தை அடுத்த வருடம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளோமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(veerakesari)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.