......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 1 December 2012

4978 பேர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் தலைமை பதவியில் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு இருப்பதற்கான பிரேரணைக்கு 4978 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.


இதேவேளை கட்சியின் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற 54 ஆவது மாநாட்டிற்கு 6143 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 5315 பேர் மாநாட்டிற்கு வருகைதந்திருந்தனர்.

அவர்களில் தலைமைப்பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு 4978 பேர் ஆதரவாகவும் 337 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.  

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE