நேற்று வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடன் கடற்கரைக்கரைக்குச் சென்று நண்பருடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது கடலலையால் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன மாணவன் இன்று மாலை 5 மணியளவில் ஏறாவூர் புன்னைக்குடாக் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி காமினி ஜயவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் காணாமல் போன சிறுவனின் சடலத்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர். தேடும் பணியில் திருகோணமலையில் இருந்து வந்திருந்த கடற்படையினரும் உதவியிருந்தனர்.
இறந்தவர் ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் கௌதன் ராஜா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இவர் தனது நண்பருடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டிருந்தார்.
இவரது நண்பரான 13 வயதுடைய பரமலிங்கம் நிசாந்தன் நேற்றைய தினமே காப்பாற்றப்பட்டு தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் ஸ்தலத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையில் ஈடுபட்டார்.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.