......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 December 2012

13 வது திருத்தம் ஒழிக்கப்படுமா?


காலத்துக்கு காலம் நமது தேசத்தில் அரசியல் பிரச்சினைகளும், சர்ச்சைகளும் தோன்றி மறையா விடில் அரசியல் அரங்குக்கு விமோசனமில்லை. அந்த வகையில் நமது நாட்டின் சமகால சூடான தலைப்புகளாக மாறியிருப்பவை - பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையும். 13வது திருத்தத்தை ஒழித்துக்கட்டல் கோஷமுமாகும்.

எதிலும், எப்படியும், நறுக்கென்று பதிலை எதிர்பார்க்கமுடியாத புறச்சூழலை கட்டியணைத்தபடி உள்ள இலங்கையில் நீண்டகால அடிப்படையைக் கொண்ட எதிர்பார்க்கையிலும் வீழ்ச்சியையும் சூழச்சியையுமே காணமுடிகின்றது. காலன் கருக் கொண்டால் மாத்திரமே காலக்கிரமத்திலாவது பலன் கிட்டும் என்ற அசாதாரண எண்ணத்துக்கு வந்துவிட்டனர் நலன் விரும்பிகள்.
பரஸ்பர நம்பிக்கையீனம், விட்டுக்கொடாமை கருத்தொற்றுமையின்மை, சமூகங்களிடையே புரிந்துணர்வின்மை காரணமாக சூழப்பட்டுள்ள இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் தீர்வுக்கு அத்திவாரமாகவும் ஆணிவேராகவும் இருக்கின்றதென கருதப்படுகின்ற 13ஆவது திருத்தம் முற்றாக ஒழிக்கப்பட்டுப் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்பு பலரிடம் ஏற்பட்டிருக்கிறது.
சர்ச்சைக்குரியதாகவும் சந்தேகங்கொண்டதாகவும், தர்க்கரீதியாகவும் வார்த்தைகளால் பிரிகை காண்பதே சட்டமாகும். என்றாலும் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தாதவரை அதுவாக மாறப்போவதில்லை.
ஜே.ஆர். கொண்டு வந்த அரசியலமைப்பே கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகிய வண்ணமிருக்கிறது எனில் அவரால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் விமர்சனமின்றி இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கமுடியாது.
இத்தகைய குறைபாடான சிந்தனைகள், மயக்கமான ஷரத்துக்கள் இருத்தபோதிலும் குறித்த அரசியலமைப்புச் சட்டத்துடன் கடந்த 34 ஆண்டுகளை அரசாங்கங்கள் ஆட்சிப்படுத்தியிருக்கின்றன. அதேபோன்று 13ஆவது திருத்ததைப்பயன்படுத்தி 25ஆண்டுகளாக இலங்கை மாகாணங்களை நிர்வகித்து வருகின்றன. தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முதன்மைப்படுத்தப்பட்டதாக 13ஆவது திருத்தத்தினூடான மாகாண சபை முறைமை வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பிரச்சினைகளின்றி நகர்ந்ததே விந்தையாகும். இந்தப்பின்னணியில் 13ஆவது திருத்தம் சங்கடங்கள் காணப்பிடினும் ஏற்பாடுகள் தெளிவாகவே உள்ளன. என்றாலும் இந்தியாவால் திணிக்கப்பட்டதன் காரணமாகவே அமுலாக்கப்பட்டது என்று குறை கூறப்படினும் முழுமையான அமுலாக்கம் செய்யப்படாத தனாலேயே தெளிவின்றிய அச்சம் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
உண்மையிலேயே 13ஆவது என்பது சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டவாக்கம். ஆனால் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசானது இன்னுமே ஒற்றையாட்சித் தத்துவத்திலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஒற்றையாட்சி தத்துவத்தையொத்த அபிவிருத்திகளையும், முன்னெடுப்புக்களையும் சட்டவாக்கங்களையும் செயற்படுத்த முனைகையில் முட்டி மோதிக்கொள்வதையும் நீதித்துறை நாடப்படுவதையும் எவராலும் தவிர்க்க முடியாத விடயமாகிப்போயிவிடுகிறது.
அதிகார பூர்வமான சில விடயங்களைச் செய்ய முனைகையில் அல்லது தேசிய நலன் குறித்த விடயங்களை முன்னெடுக்க நகர்கையில் 13ஆவது திருத்தத்தின் மூலமான ஷரத்துகள் காரணமாக தடைபட்டுப் போவதான வாதங்கள் முன்வைக் கப்படுகின்றன. இத்தகைய வாதங்களில் நியாயமி ருக்கலாம். ஆனால் மாகாணசபை முறைமை யுள்ள நமது நாட்டில் அத்தகைய முறைமையில் தாக்கமும், பிரதிபலிப்பும் உட்புகாவண்ணமே சட்டங்கள் திட்டமிடப் படவேண்டும் என்பதையே நமது நாட்டுச் சட்டங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன.
இந்த பின்னணியில் மாகாண சபை முறை மையை ஒழித்து 13ஆவது திருத்தத்தை ரத்துச்செய்தல் என்ற கோரிக்கைகள், வாதங்கள் கடும்போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன. அரசாங்கம் இது தொடர்பான எத்தகைய இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. அநேகமாக மிகச்சில கட்சிகளைத் தவிர ஏனைய சகல கட்சிகளும் 13ஆவது திருத்த ஒழிப்புக்கு ஆதரவுச் சமிக்ஞை காண்பிக்கவில்லை.
அரசாங்கம் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. அதற்குரிய பின்புல அதிகாரமும் பலமும் உண்டு. ஏற்கனவே பல தடவைகளில் இந்தியாவிடமும், அந்நாட்டியின் எதிர்க்கட்சித் தலைவியிடமும் ஜனாதிபதி பதின்மூன்று பிளாஸ் என்ற வாக்குறுதியும் உண்டு. மீள்வாக்குறுதியும் உண்டு. அதேநேரம் சமீபத்திய, மாகாணசபை முறைமையை பரிசீலிக்காலம் என்ற முன்மொழிவும் உண்டு அரசியலில் எதுவும் நடக்கலாம் தீர்மானம் மாறமுடியாதவையல்ல. 13ஆவது திருத்தத்தை ஒழித்துக்கட்ட சர்வதேசம் விடாது என்ற ஒருமித்தத் தமிழ், முஸ்லிம் கோஷமுண்டு. பெரும்பான்மை சிங்கள அரசியல் முக்கியஸ்தர்களின் கருத்துமுண்டு. அரசியலைப்பு திருத்தம், மாற்aடு, உட்புகுத்துகை, நீக்கம், அறிமுகம் போன்றன ஒரு உள்நாட்டு அரசியல் அல்லது அரசியலமைப்பு அல்லது அரசாங்க விவகாரம் எனக்கூறி சர்வதேச சமூகம் பாராமுகமாக இருந்து விட முடியாது என்பதற்கில்லை.
இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிநாதமாகக் கருதப்படுகின்ற 13ஆவது திருத்தம் ஒழிக்கப்படக்கூடாது என்பதில் தமிழ் பேசும் வடக்கு கிழக்கு அரசியல் வாதிகள் ஒருமுகமாக செயல்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கிறது. பலதடவைகளில் சம்பந்தர் உட்பட பல தமிழ் கூட்டமைப்பு எம்பிக்களும், பிரமுகர்களும், குறித்த திருத்தம் ஒழிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்று அதிகார தோரணையிலும், எச்சரிக்கை தோரணையிலும் கூறிவிட்டனர்.
எவ்வாறாயினும் எச்சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வாக புலிகளோ, தமிழ் மிதவாதிகளோ ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறு சமகாலத்தில் சிங்கள கடும்போக்குவாதிகள் 13ஆவது திருத்தமானது அரசியலமைப்புக்குள்ளும் இலங்கை மீதும் திணிக்கப்பட்டது என்று கூறுகிறார்களோ அதேபோன்று அன்று தமிழ்புலிகளும் திணிக்கப்பட்ட திருத்தம் போன்று ஒரு மனதுடன் ஏற்காதிருந்தனர்.
அந்தடிப்படையில் சமகாலத்தில், பதின்மூன்றுமில்லை பிளசுமில்லை என்ற சட்டவாக்கத்தை தயார்படுத்த முனைகையில் அதனை எதிர்த்து நின்று தடுக்கக்கோரும் தார்மீகமும் யதார்த்தமும் பலமிழந்து சவாலுக்குள்ளாகிக் காணப்படுவதாக அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது.
அதனை ஒரு பொருட்டாகவோ தீர்வாகவே ஏற்கமுடியாது என்று கூறிய நீங்கள் அதனை ஒழிக்க முற்படுகையில் மாத்திரம் ஏன் அந்தரப்படுகிaர்கள் எனக் கேட்பின் அநியாயமான கேள்வி என்று கூறிவிட முடியாது. அன்று 13ஆவது திருத்தத்தையேற்று பிரிவினை வாதத்தை கைவிட்டு மாகாண சபை முறைக்குள் பிரவேசித்திருந்தால் சமகாலத்தில் மறுக்கப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரங்களைக்கூட எப்போதே அனுபவித்திருக்கலாம். ஏன் சமஷ்டி ஆட்முறைமையின் மாதிரித்துவத்தை அறிமுகப்படுத்தக்கூட வாய்ப் பிருந்திருக்கும்.
ஆனால் அன்று அவ்வாறெல்லாம் நடவாதுபோனமை, நாட்டுக்கு சிறந்தது என சமகாலத்தில் பெரும்பான்மைவாதிகள் நினைத்திட வாய்ப்பை உண்டு பண்ணியமை மாத்திரமே எஞ்சிக்கிடக்கிறது.
தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற இந்திய, அமெரிக்க நிலைப்பாடுகள் இல்லாமலில்லை. வேறு சர்வதேச நாடுகளிலும் அத்தகைய எண்ணப் பாடுகள் இருக்கலாம். ஆனால் அவை எந்தவகையில் முகாமைப் படுத்தப்படலாம் என்பது நிறைவான கேள்வியே. 13வது திருத்தத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தம். அதனை இல்லாதொழிப்பதற்கான தறுவாயில் அவ்வாறு செய்யவேண்டாம் என்ற அதே பலத்துடன் துணைக்கு வருமா என்பதும் முக்கியமான கேள்வியே.
சட்டத்தரணி
இஸ்மாயில் பி.மஆரிஃப்
தலைவர் - சுயாதீன தேசியமுன்னணி

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE