அரசாங்க உயர் அதிகாரியானாலும் குற்றமிழைப்பின் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி சட்டவாக்கத்துக்கு அமைவாகப் பாராளு மன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் போதும் அதற்கு எதிராகக் குற் றஞ்சாட்டுபவர்களை என்னவென்று சொல்வது? எனவும் கேள்வியெழுப்பினார்.
கொழும்பு- காலி அதிவேக பாதையில் வெலிப்பென்னையில் புதிதாக நிர்மாணி க்கப்பட்டுள்ள பயணிகள் சேவை நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் குமாரவெல்கம, மஹிந்த யாப்பா அபேவர்தன, மேர்வின் சில்வா, சி. பி. ரத் நாயக்க, பிரதியமைச்சர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ரோஹன திசாநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட வாக்கத்திற்கமைய நடவடிக்கை எடுத்துள்ள போதும் அதற்கு எதிராகக் குற்றஞ்சாட் டுபவர்களை அவர்களின் பழக்க தோஷம் என்றே குறிப்பிட வேண்டும்.
குற்றமிழைத்தால் அவர் உயர் அதிகாரி யானாலும் கீழ் மட்டத்திலுள்ளவராயினும் தண்டனை கிட்டவேண்டும். நான் எவரையும் பழிவாங்குபவனல்ல. நீதிமன்றத்தின் மீது எப்போதும் உயர் கெளரவத்தை கொண் டுள்ளவன் என்பதையும் குறிப்பிட விரு ம்புகிறேன்.
அரசாங்கம் எதைச் செய்தாலும் அதற்கு எதிராகக் குற்றம் சுமத்துபவர்கள், குற்றங்களுக்கு ஆதரவாகச் செயற்படுபவர்கள் தொடர்பில் மக்கள் தெளிவுடன் உள்ளார்கள். உண்மையை மக்கள் அறிவர்.
நாடு மாற்றத்தை நோக்கி முன்னேறிச்செல்கிறது. இதனை சில சக்திகள் பொறாமையுடனேயே நோக்குகின்றனர். அவர்களால் விற்கப்பட்ட அரச கூட்டுத்தாபனங்களை நாம் மீளப் பெற்று அவற்றை இலாபமீட்டும் அரச நிறுவனங்களாக மாற்றியுள்ளோம்.
நிறுவனத் தலைவர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டதால் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. பாராளுமன்றத்தில் இது பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிலர் குரல் எழுப்பினர்.
அவரது பாரியாருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க நாம் பாராளுமன்ற சட்டவாக்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தோம்.
இதனை முறைப்படி மேற்கொள்வதற்க ¡ன பொறுப்பு உள்ளது. ஏனோ தானோ என்று செயற்பட முடியாது என்பதால் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கெதி ராகவும் தற்போது குற்றஞ்சாட்டுகின்றனர். நான் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சிலரை நியமித்தேன். அவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றார்கள். அதனை நாம் குறை கூறமுடியாது. அவர்கள் தமது ஊதியத்துக்காக வேலை செய்கின்றார்கள். அதில் தவறில்லை.
நாட்டில் சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. சட்டத்தின் முன் சகலரும் சமமே. வெளிநாடுகளில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எமது படையினர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அங்கே இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த புலிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எவரும் எதற்கும் விமர்சனம் செய்ய இப்போது உரிமையுள்ளது. எனினும் இந்த நாட்டு மக்களைப் பலியெடுத்தவர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பற்ற பேசுகின்றனர்.
பொய்ப் பிரசாரங்களால் மக்களைத் திசை திருப்ப முடியாது. மக்கள் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மக்கள் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
எத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் எமது பயணம் வெற்றிகரமாகத் தொடரும். (ஸ)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.